அருப்புக்கோட்டை | ஆசிரிய தம்பதி கொலை வழக்கில் மில் தொழிலாளியுடன் மனைவியும் கைது

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டையில் ஆசிரியத் தம்பதி கொலை வழக்கில் மில் தொழிலாளியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் ஜோதிபுரம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (65). இவரது மனைவி ஜோதிமணி (61). இருவரும் ஆசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். கடந்த ஜூலை 18-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சங்கரபாண்டி யனின் எதிர் வீட்டில் வசிக்கும் மில் தொழிலாளி சங்கர் (42) என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில் சங்கரபாண்டியனையும், ஜோதிமணியையும் சங்கர் கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: சங்கரபாண்டியனின் எதிர் வீட்டில் அண்மையில் சங்கர் குடி வந்துள்ளார். இரு குடும்பத்தினரும் சகஜமாக பழகி வந்துள்ளனர். சங்கரபாண்டி யனிடம் சங்கர் கடன் கேட்டுள்ளார். சங்கரபாண்டியன் பணம் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர், ஆசிரியத் தம்பதியை கொலை செய்துள்ளார். சங்கரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொன்மணியையும் கைது செய்துள்ளோம் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்