சென்னை | பீர் பாட்டிலை உடைத்து ரவுடி தாக்கியதில் 2 போலீஸார் படுகாயம்

By செய்திப்பிரிவு

சென்னை அண்ணாநகர் மேற்கு 6-வது ரவுண்டு பில்டிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் சிலர் ரகளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய போலீஸார் நந்தகோபால், ராயப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது ரகளையில் ஈடுபட்டிருந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, போலீஸார் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

அப்போது உடைத்த பீர் பாட்டிலை கொண்டு அவர் காவலர்களை தாக்கினார். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும் ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் அண்ணா நகர்மேற்கு பாடி புதுநகரை சேர்ந்த மணிகண்டன்(27)என்பது தெரிய வந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தேடப்படும் குற்றவாளியாக இருந்துள்ளார்.

படுகாயமடைந்த நந்தகோபால், ராயப்பன் ஆகியோர், அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை டிஜிபி சைலேந்திரபாபுநேரில் சென்று நலம் விசாரித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

மேலும்