சேலம் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - மூவரிடம் விசாரணை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்டு ரூ.25 ஆயிரத்து 200 பணத்தை பறிமுதல் செய்து, லஞ்சம் கொடுக்க வந்த மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் சூரமங்கலமத்தில், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில், அங்கீகாரம் தர லஞ்சம் கேட்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், ரவிச்சந்திரன், ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் நேற்று மாலை சோதனை செய்னர்.

தொடர்ந்து, அலுவலகத்தில் உதவி இயக்குநர் ராணி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நில அங்கீகாரம் பெற வந்திருந்த மூவவரிடம் ரூ.25 ஆயிரத்து 200 பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வைத்துள்ள ஆவணங்களை பறிமுதல் செய்து, அந்த ஆவணத்தின் நிலை குறித்தும், அதற்காக தான் லஞ்ச பணம் கொண்டு வந்தனரா என அலுவலகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

மேலும்