சேலம்: சேலத்தில் கந்து வட்டி கேட்டு ஓட்டல் உரிமையாளரை கடத்திய ரவுடி உட்பட இரண்டு பேர் கைது செய்த போலீஸார், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பெண் உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர்.
சேலம், புது ரோடு , ரவி நகரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுப்பிரமணி (41). இவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி அன்பரசி (34) ஓமியோபதி மருத்துவராக உள்ளார். சின்ன திருப்பதி பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் சரண்யா என்பவரிடம் கந்து வட்டிக்கு சுப்பிரமணியம் ரூ.24 லட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.100-க்கு ரூ.20 வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்த சுப்பிரமணியம், வட்டி, அசல் சேர்த்து ரூ.96 லட்சம் சரண்யாவுக்கு செலுத்தியுள்ளார். ஆனால், ரியல் எஸ்டேட் அதிபர் சரண்யா ரூ.100க்கு ரூ.30 வட்டி தர வேண்டும் எனக் கூறி, சுப்பிரமணியத்திடம் மேலும் ரூ.70 லட்சம் சேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். சுப்பிரமணியன் கூடுதல் வட்டி பணம் தர முடியாது என சரண்யாவிடம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், சூரமங்கலம் காவல் நிலையத்தில், நேற்று பகல் 11 மணிக்கு காரில் வந்த கும்பல், தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக அன்பரசி புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சுப்பிரமணியனை கடத்தி சென்ற கும்பலை தேடி வந்தனர்.
சுப்பிரமணியனை கடத்தியது சின்னம்மாபாளையத்தை சேர்ந்த ரவுடி டேவிட் (எ) உதயகுமார் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது. சூரமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் சுப்பிரமணியனை ரவுடி கும்பல் அடைத்து வைத்திருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். போலீஸார் வீட்டை சுற்றி வைத்து, உள்ளே புகுந்து சுப்பிரமணயினை மீட்டனர். அங்கிருந்த ரவுடி டேவிட்(37), அவரது கூட்டாளி ஏற்காடு அடிவாரத்தை சேர்ந்த குமார் (31) இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த மற்றவர்கள் போலீஸார் பிடியில் சிக்காமல் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
» அன்று ‘ட்ரோல்’ ஆன கன்னட சினிமா... இன்று பாராட்டு மழையில்... - மாறிய காட்சியின் பின்னணி என்ன?
» ஒசூர் அரசுப் பள்ளி வகுப்பறைகளில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 100+ மாணவர்களுக்கு சிகிச்சை
கைது செய்யப்பட்ட ரவுடி டேவிட்டிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ரியில் எஸ்டேட் அதிபர் சரண்யா கூறியதின் பேரில், சுப்பிரமணயினை காரில் கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சரண்யா, அமீர் உள்பட ஆறு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago