சென்னை: துபாயில் இருந்து விமானம் மூலம் ‘ஹெட் போனில்’ மறைத்து கொண்டுவந்த 2 கிலோ தங்க கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அக்டோபர் 11-ம் தேதி சென்னை விமான நிலையம் வந்த 3 பேரைசுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் மறைத்து எடுத்துவந்த 240 கிராம்எடைகொண்ட 3 தங்க கட்டிகள், மேலும், ‘ஹெட் போனில்’ மறைத்து வைத்து கொண்டு வந்த 2.605 கிலோ எடை கொண்ட66 தங்க கட்டிகள், ரூ.14 லட்சம்மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட 2.845 கிலோ தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1.25 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
57 mins ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago