பத்தினம்திட்டா: கேரளாவில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று அவர்களின் நர மாமிசத்தை சமையல் செய்து சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் பகவல் சிங்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள எலந்தூர் என்ற கிராமத்தில் நரபலி கொலை நடந்துள்ளது. இரண்டு பெண்களுக்கு பணத் தேவை இருந்துள்ளது. அவர்கள் இருவரும் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளனர். ஆபாச படத்தில் நடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என அவர்களை நம்பவைத்து இந்த கொலையை கொலையாளிகள் அரங்கேற்றியுள்ளனர்.
கொலை செய்த குற்றத்தில் ஷஃபி, பகவால் சிங் மற்றும் அவரின் மனைவி லைலா என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷஃபி அறிவுரை கொடுத்ததன்பேரில் பகவால் சிங்கும் மற்றும் அவரின் மனைவி லைலாவும் இந்த கொலையை செய்துள்ளனர். இந்த கொலை அந்த தம்பதிகளின் வீட்டில் நடந்துள்ளது.
கொலையான பெண்கள் இருவரும் சொல்ல முடியாத சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். அடித்தும், உடலின் அந்தரங்க பகுதியில் கத்தியால் குத்தப்பட்டும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இரு பெண்களில் ஒரு பெண்ணின் மார்பகங்களை கொலையாளி ஒருவர் அறுத்துள்ளார். மேலும், அவர்களது ரத்தத்தை வீட்டின் சுவர் மற்றும் தரையில் அந்த கணவனும் மனைவியும் தெளித்துள்ளனர்.
» மதுரை விமான நிலையத்தில் ரூ.56.40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
» மதுரை | மேம்பாலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி ‘ஜாலி ரைடு’ செய்த இரு இளைஞர்கள் கைது
அதன்பிறகு அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ளனர். இரண்டாவதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. நிதி ஆதாயத்திற்காக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களில் ஒருவரான பகவல் சிங், அடிக்கடி பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பவர். 60 வயதான பகவல் சிங் அந்தப் பகுதியில் சமூக சேவகராகவும் கண்ணியமான நபராகவும் சொந்த ஊர் மக்கள் மத்தியில் வலம்வந்துள்ளார். நாட்டு வைத்தியராகவும் செயல்பட்டு வந்துள்ளார். சிபிஎம் கட்சியில் உறுப்பினராக இல்லை என்றாலும் அடிக்கடி கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
ஹைக்கூ கவிதைகளையும் அதிகமாக தனது வலைதள பக்கங்களில் பகிர்ந்துவந்துள்ளார். அவரது முகநூல் பக்கம் முழுவதுமே ஹைக்கூ கவிதைகளால் நிறைந்துள்ளது. அவரின் கவிதைகளால் அவருக்கு பேஸ்புக்கில் 1,100க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அதாவது, கடைசியாக அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை கொன்று நரபலி கொடுத்ததாக சொல்லப்படும் ஒரு வாரத்திற்கு பிறகு மலையாளத்தில் இரண்டு கவிதைகளை பகிர்ந்துள்ளார்.
அதிலும், கடைசியாக அவர் வெளியிட்ட கவிதையானது, "ஒரு உலை, கொல்லனின் மனைவி வேலையில், அவள் உடல் வளைந்திருந்தது." என்பதாக இருந்துள்ளது. பகவல் சிங்கின் குடும்பம் முற்போக்கு நிறைந்ததாக அந்தப் பகுதியில் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரை குறிப்பிடும் வகையில் இவருக்கு பகவல் சிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago