புறநகர் ரயிலில் பட்டா கத்தியுடன் பயணம்: 3 கல்லூரி மாணவர்கள் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே புறநகர் ரயிலில் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணம் செய்த வழக்கில் 3 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே கடந்த வெள்ளிக்கிழமை புறநகர் ரயிலில் 4 நபர்கள் பட்டா கத்தியுடன் சென்றனர். அப்போது, அவர்களில் சிலர் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்த நபர்களை பிடிக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா உத்தரவிட்டார். இதன்பேரில், கொருக்குபேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னேரி அருகே கீரைபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருள்(18), எளாவூரைச் சேர்ந்த இரண்டு இளம்சிறார்கள் என மூன்று கல்லூரி மாணவர்களை கொருக்குப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்