சென்னை: தமிழக அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் மூலம் நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அவற்றை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர்.
அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின்படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த செப். 26 முதல் அக். 2-ம்தேதி வரையிலான ஒரு வாரத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.15.62 லட்சம் மதிப்புள்ள 2,765 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட33 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 195 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
52 mins ago
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago