ஆரணியில் கூடா நட்புக்கு தடையாக இருந்ததால் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த மனைவி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஆரணி விஏகே நகரில் வசித்தவர் வெற்றிவேல்(42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ரேவதி (32). இவருக்கும், ஆரணி அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ்என்பவருக்கும் ‘கூடா நட்பு’ இருந்துள்ளது. இதனை, வெற்றிவேல் கண்டித்துள்ளார்.

இதற்கிடையில், விபத்தில் சிக்கிய வெற்றிவேல் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து, கடந்த 5-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர், வீட்டில் நேற்று முன் தினம் காலை மயங்கி கிடந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வெற்றிவேல் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் வெற்றிவேலுவின் தந்தை சின்னபையன் கொடுத்த புகாரில், தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித் துள்ளார். இதனால், ரேவதியை அழைத்து விசாரணை நடத்தப் பட்டது. அதில், ‘கூடா நட்பு’க்கு இடையூறாக இருந்த கணவர் வெற்றிவேலுவை, ஆண் நண்பர் நாகராஜ், கண்ணமங்கலம் அடுத்த மோட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கூலி படையைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து உறக்கத்தில் இருந்தபோது, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதற்காக வெற்றிவேலுவுக்கு முதல் நாள் இரவு தூக்க மாத்திரைகளை ரேவதி கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ரேவதி மற்றும் நாகராஜ் ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், வேலூர் நீதித்துறை 4-வது நடுவர் நீதிமன்றத்தில் ராஜேஷ் சரணடைந் துள்ளார். இவர்கள் 3 பேரும், வெற்றிவேலை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டு வீட்டிலேயே கொலை செய்துள் ளனர் என காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

மேலும்