சென்னை: இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டவாறு, கத்தி முனையில் கல்லூரி மாணவரை கடத்தி ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டிய இருவரை போரூர் போலீஸார் கைது செய்தனர். சென்னை, போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் சபரி (16) பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சபரி நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிவிட்டு இரவு 7 மணியளவில் போரூர் ரவுண்டானா வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, அவரிடம் லிப்ட் கேட்பதுபோல் இருவர் அவரது வாகனத்தில் ஏறிக்கொண்டனர். சிறிது தூரம் சென்றதும் கத்தி முனையில் சபரியை அருகில் உள்ள பகுதிக்கு கடத்திச் சென்றனர். பின்னர் மாணவரின் செல்போனை பறித்து அவரது தாய் சுசிலாவை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் “உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்தால் விட்டு விடுகிறோம். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்” என மிரட்டி விட்டு போன் இணைப்பை துண்டித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுசிலா தனது மகன் கடத்தப்பட்டது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக மர்ம நபர்கள் சுசிலாவை தொடர்புகொண்ட செல்போன் எண்ணின் “டவர் சிக்னலை” வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது குன்றத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சபரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் சபரியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக போரூரைச் சேர்ந்த பாலா என்ற பாலாஜி (25), அவரது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago