காரில் முந்திச் செல்வதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் - ஐஏஎஸ் அதிகாரி இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் சுபாஷ் (22), பேத்தி பாரதி ஆகியோர் தங்கள் தாயுடன் சென்னை அண்ணா நகரில் இருந்து அசோக் பில்லரை நோக்கி 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு காரில் சென்றனர்.
அசோக் நகர் பகுதியில் சென்றபோது, அருகே மற்றொரு காரில்வந்தவர்களுக்கும், இவர்களுக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த காரில் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி கண்ணன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் இருந்துள்ளனர். இந்த காரை முத்துராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அவர்கள் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், இரு தரப்பினரையும் அசோக் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தகவல் கிடைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இரு தரப்பிலும் அளித்த புகார்களின் பேரில், பெயர் எதுவும் குறிப்பிடாமல் இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்து, தலைமைச் செயலர் இறையன்புவை சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
க்ரைம்
4 mins ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago