சென்னை: கோடம்பாக்கத்தில் மனைவி நினைவு நாளில் ரவுடி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராஜா புரணிகர் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (34). சூளைமேடு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஒரு கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது குடிசை வீட்டில் பிரசாந்த் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில், அவர் மீது பற்றிய நெருப்பு குடிசைக்கும் பரவியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரசாந்த் நேற்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த ஆண்டு இதே மாதத்தில் பிரசாந்த்மனைவி குளோரி தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்டார். இரு தினங்களுக்கு முன்னர் அவரது நினைவு தினமாகும்.மனைவி இறந்த வேதனையில் இருந்தபிரசாந்த், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்ததனர். பிரசாந்துக்கு 10 வயதில் மகன் உள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago