சென்னை: நடிகை தற்கொலை மரணம்குறித்து தயாரிப்பாளர், அவரது நண்பரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனது சகோதரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகையின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்ற தீபா(29). இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தார். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வாய்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
உருக்கமான கடிதம்
பவுலின் ஜெசிகா, கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் காதல் கைகூடாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை என்றும் குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். நடிகை தற்கொலை குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பவுலின் காதலன் என கூறப்படும் திரைப்பட தயாரிப்பாளர் சிராஜுதீன், அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
» ராணி 2-ம் எலிசபெத்துக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி - குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு
» ஹிஜாபை எரித்தும், கூந்தலை துண்டித்தும் எதிர்ப்பு - ஈரானில் பெண்களின் போராட்டம் தீவிரமடைகிறது
பவுலின் குடியிருந்த வீட்டருகே உள்ள சிசிடிவிபதிவுகளையும் கைப்பற்றிஉள்ள போலீஸார், அவரது வீட்டுக்கு யாரெல்லாம் வந்து சென்றனர் என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். சிராஜுதீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவரை பவுலின் காதலித்து வந்ததும், அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. பவுலின் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்துவிசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, தனது சகோதரி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என பவுலின் சகோதரர் ராஜேஷ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago