திருப்பூர்: மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞரை அலுவலகத்துக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய 2 மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருப்பவர் ஜமீலாபானு(50). இவர் தனது மகளுடன் இன்று மதியம் குமரன் சாலையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்துள்ளார். தனது மகளுடன் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர் திடீரென ஜமீலாபானு மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டினர்.
இதில் இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தபோது மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் வடக்கு போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ரத்த காயங்களுடன் இருவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வந்த போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளை அப்பகுதியில் மர்மநபர்கள் போட்டுவிட்டு சென்றதால், அதனை போலீஸார் கைப்பற்றினர். அதேபோல் அரசு வழக்கறிஞர் என்பதால் வழக்கறிஞர்கள் பலரும் அவரது அலுவலக பகுதியிலும், அரசு மருத்துவமனையிலும் திரண்டனர். அங்கு 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago