கர்ப்பிணி மீது டிராக்டர் ஏற்றி கொலை - நிதி நிறுவன மேலாளர், ஏஜென்டுகள் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

ஹசாரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பரியத் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேத்தா. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் டிராக்டர் வாங்க கடன் வாங்கியிருந்தார். நிலுவைத் தொகை ரூ.1.3 லட்சத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனால் டிராக்டரை பறிமுதல் செய்த கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகள், மிதிலேஷ் மேத்தாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே டிராக்டர் நிற்கும் இடத்தை நோக்கி மிதிலேஷ் மற்றும் அவரது 3 மாத கர்ப்பிணி மகள் மோனிகா தேவியும் (27) ஓடினர். டிராக்டரை எடுத்துக் கொண்டு கடன் வசூலிக்க வந்தவர்கள் புறப்பட்டனர். டிராக்டர் பின்னாடியே இருவரும் ஓடினர். ரூ.1.2 லட்சத்தை உடனே செலுத்துவதாகவும் அவர்கள் கூறினர். அதை கண்டு கொள்ளாத ஏஜென்டுகள், முழுத் தொகையை செலுத்தும்படி கூறிவிட்டு சென்றனர்.

தொடர்ந்து தந்தையும் மகளும் டிராக்டர் பின்னால் ஓடி வந்ததால், டிராக்டரை ஓட்டிய நபர் டிராக்டரை நிறுத்தி, அவர்களை நோக்கி பின்பக்கமாக டிராக்டரை ஓட்டினார். தன் மீது அவர்கள் மோத வருவதை உணர்ந்த மிதிலேஷ் மேத்தா டிராக்டரின் டயரை விட்டு விலகினார். அதனால் அவர் உயிர் தப்பினார். பின்னால் ஓடிவந்த மோனிகா தேவி டிராக்டர் டயரில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கடன் வசூலிக்கும் ஏஜென்டுகள் மற்றும் நிதி நிறுவனத்தின் மேலாளர் மீது போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோனிகாவின் உடலுடன் ஹசாரிபாக் மாவட்ட ஆட்சியர் முன்பு போராட்டம் நடத்திய கிராமத்தினர், விவசாயி மிதிலேஷ் யாதவ் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்