அருப்புக்கோட்டையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடல், விருதுநகர் அரசு மருத்துவமனையில் நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையில் கடந்த 14-ம் தேதி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் (34) என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தங்கப்பாண்டியன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் காப்பகத்தில் போலீஸார் சேர்த்தனர். பின்னர், இரவில் தங்கப்பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவிட்டு மீண்டும் காப்பத்தில் விட்டுள்ளனர்.
அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கப்பாண்டியன் திடீரென உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் கிராம மக்களும் புகார் தெரிவித் தனர்.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முத்துஇசக்கி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தங்கப்பாண்டியனின் உடல் நேற்று விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு நீதித்துறை நடுவர் முத்துஇசக்கி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்பு தங்கப்பாண்டியனின் உடல், அவரது குடும்பத்தினரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago