கோவை: கோவையில் சந்தன மர கட்டைகளை கடத்த முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட அன்சூரை அடுத்த மோரிப்பள்ளம் பகுதியில் சந்தன மரங்களை வெட்டி, கட்டைகளை கடத்த முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்கு சென்று வனத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, குண்டூரைச் சேர்ந்த முருகேசன் (35), அன்சூரைச் சேர்ந்த வீரையன்என்கிற காளிமுத்து (42), ஆனந்தகுமார் (42), சொரண்டியைச் சேர்ந்த சஞ்சித் (21) ஆகியோர் 15 சந்தன மரங்களை வெட்டிச் செதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, “சந்தன மர கட்டைகளை கடத்த முயன்றவர்களில் முருகேசன் மட்டும் தப்பிஓடிவிட்டார். அவரை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
» தொடக்கப் பள்ளி மாணவருக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: அக்.10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
பிடிபட்ட மற்றவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago