பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை: தூத்துக்குடியில் ரவுடி உட்பட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரத் தைச் சேர்ந்த முனியசாமி மகன்முருகன் என்ற கட்டை முருகன் (27). இவரது கூட்டாளி அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல்ராம் (19). இவர்கள் இருவரும் கடந்த 14-ம் தேதி இரவு 9 மணியளவில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றுள்ளனர். தருவைகுளம் கல்மேடு பகுதியில் உள்ள ஒருவீட்டில் வைத்து அந்த பெண்ணை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் காலையில் அந்த பெண்ணை அவரது வீட்டருகே கொண்டு விட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸார்விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் முருகன் தருவைகுளம் பகுதியில் நின்ற ஒருவரிடம் அரிவாளை கழுத்தில் வைத்து மிரட்டி ரூ.500-பறித்துச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்ற போது கீழே விழுந்து முருகனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவங்களை அறிந்த எஸ்பி இருவரையும் பிடிக்க டிஎஸ்பி சத்தியராஜ் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் வனிதா, மணிமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி முருகன், கோகுல்ராம் இருவரையும் கைது செய்தனர். பிரபல ரவுடியான முருகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி முருகன், கோகுல்ராம் இருவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்