கரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: குவாரி தொழிலாளர்கள் இருவர் பலி

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கல் குவாரி தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அருகேயுள்ள தாதம்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (45). இவர் கல்குவாரியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் சேட்டு (35). இவரும் அதே கல் குவாரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இன்று (செப்.16) உதயகுமார் குவாரிக்கு செல்வதற்காக பஞ்சப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குப்பத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார். கரூரில் இருந்து சேட்டுவும் உதயகுமாருடன் சென்றுள்ளார்.

க.பரமத்தி பவர்கிரிட் அருகே கோவையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றப்போது எதிரே வந்த இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியதில் உதயகுமார், சேட்டு இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் கார் ஓட்டுநர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அனப்புலா அருகேயுள்ள உள்லோகரனையை சேர்ந்த சுஹாஸ் ஹரி (31) என்பது விசாரணையில் தெரியவந்தது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள க.பரமத்தி போலீஸார், உயிரிழந்த உதயகுமார், சேட்டு ஆகியோரின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்