சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே மதுவுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாததால் இணைப்பிரியா நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
சிங்கம்புணரி அருகே கருப்பர்கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் வெள்ளைகண்ணு (25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், சமீபத்தில் ஊருக்கு திரும்பினார்.
மேலும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளநிலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் மதியரசன் (25). திருமணமாகாதவர். இணைபிரியா நண்பர்களான இவர்கள் தினமும் மது அருந்தி வந்தனர்.
இதனால் இருவரையும், அவரவர் தாயார் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். மதுவுக்கு அடிமையான அவர்களால் அதில் இருந்து மீள முடியவில்லை. இதனால் மனமுடைந்த இணை பிரியா நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மதுவில் விஷம் கலந்து குடித்தனர்.
இதையறிந்து அவர்களது உறவினர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் உயிரிழந்தனர். எஸ்.வி.மங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago