தேவகோட்டை, காரைக்குடியில் 2 போலி மருத்துவர்களை நோயாளி போல் காத்திருந்து மருத்துவ இணை இயக்குநர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
தேவகோட்டை சிதம்பரநாதபுரம் முதல் வீதியில் கிளினிக் நடத்தி வந்தவர் தாரகராமன் (40). இவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டிக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், கைலி அணிந்து நோயாளி போல் சென்று தாரகராமனை பிடித்தார்.
அவரிடம் விசாரித்ததில் அக்குபிரஷர் படித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்குரிய சான்றிதழ்களை தரவில்லை. இதையடுத்து அவரை போலீஸாரிடம் இளங்கோ மகேஸ்வரன் ஒப்படைத்தார்.
அவரை கைது செய்த தேவகோட்டை நகர் போலீஸார், அவரது கிளினிக்கில் இருந்த அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், காரைக்குடி அமராவதி புதூரில் முருகானந்தம் (52) என்பவர் பிளஸ் 2 படித்துவிட்டு 25 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவரையும் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பிடித்தனர்.
அவர் சித்தா படித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து சோமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீஸார், அலோபதி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago