போபால்: பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது நர்சரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பேருந்தின் ஓட்டுநர், பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்துள்ளது. இதனை உறுதி செய்த போலீசார் தரப்பு வெளியிட்ட தகவல்: மூன்றரை வயதான அந்த மாணவி பள்ளி முடிந்த பிறகு பேருந்தில் வீடு திரும்பியபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவி அந்த மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவி வீடு திரும்பியதும் தனது மகளின் உடை அவளது பையில் இருந்த மாற்று உடையின் மூலம் மாற்றப்பட்டுள்ளதை அடையாளம் கண்டுள்ளார் அவரது தாய். இது தொடர்பாக அவர் படிக்கும் பள்ளியின் வகுப்பாசிரியர் மற்றும் முதல்வரை அணுகியுள்ளார். ஆனால், அவர்கள் உடையை தாங்கள் மாற்றவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு உடலில் வலி இருப்பதாக சொல்ல, அவரிடம் கவுன்சிலிங் மேற்கொண்டபோது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர்தான் உடையையும் மாற்றியுள்ளார் என குழந்தை சொல்லியுள்ளது.
மறுநாள் பள்ளிக்கு சென்று இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். அதோடு அந்த ஓட்டுநரையும் குழந்தை அடையாளம் காட்டியுள்ளது. திங்கள் அன்று குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து அந்த ஓட்டுநர் மற்றும் பெண் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
» டி20 போட்டிகளில் விராட் கோலி ஓப்பனராக களம் இறங்குவது சிறந்தது: ரோகன் கவாஸ்கர்
» அதிமுக அலுவலக சூறை வழக்கில் சிசிடிவி ஆதாரங்கள்: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்த மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக பள்ளி நிர்வாகம் இந்தக் குற்றத்தை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டதா என்பதை அறியும் நோக்கில் விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago