தாம்பரம்: தாம்பரத்தில் தனியார் வருமான வரி ஆலோசகர் வீட்டில் 92 பவுன் திருடு போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பெரியார் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். தாம்பரத்தில் வருமானவரி ஆலோசனை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 9-ம் தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் 92 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாம்பரம் போலீஸார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகள் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago