பரங்கிப்பேட்டையில் பாஜக ஒன்றிய தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸார் விசாரணை

By க.ரமேஷ்

கடலூர்: பரங்கிப்பேட்டையில் பாஜக ஒன்றிய தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்: பரங்கிப்பேட்டை சலங்கக்காரத் தெருவை சேர்ந்தவர் தாமரை கிருஷ்ணன் மகன் முருகன் (42). இவர் பரங்கிப்பேட்டை ஒன்றிய பாஜக தலைவராக உள்ளார். இந்த நிலையில் அவர் கடலூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக இன்று (செப்.12) அதிகாலை அவரது கார் டிரைவர் சிவராஜை வர சொல்லி உள்ளார்.

அவரது வீட்டுக்கு சென்ற கார் டிரைவர சிவராஜ், முருகன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை வெளியே எடுத்து துடைக்கும் பொழுது காரின் வலது புற பின் சக்கரம் வெடித்துள்ளது பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் முருகனிடம் தகவல் தெரிவித்துள்ளார். முருகன் கீழே வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு எரிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவம் நடத்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் வெளியே 1 லிட்டர் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கலந்த காலிபாட்டில் ஒன்றும், வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பீர்பாட்டில் ஒன்று எரிந்து சிதறிய நிலையிலும் இருந்ததை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் காரின் டயர் எரிந்த நிலையில் படித்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்