திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியதாக சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு. சிடிஎச் சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் ஆனந்தபாபு, ரவி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் வினோத்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி எதிரே சாலையோரம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரிக்கச் சென்றனர். உடனே, அந்த இளைஞர்களில் ஒருவர், போலீஸ்காரர் வினோத்குமாரை தாக்கியாகக் கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த இளைஞர்கள் அங்குள்ள தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.
» பெருமழைக் காலங்களில் தீவாக மாறும் தாம்பரத்தை காக்க நிரந்த வெள்ள தடுப்பு திட்டம் அமலாவது எப்போது?
» வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள பறவைகள் காட்சி அரங்கம் நவீனமாகுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மேலும் அதில் ஒருவர் ஆந்திர மாநில சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த செவ்வாப்பேட்டை போலீஸார் ஆதித்யன், சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago