பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 3 பேர் கைது

By இரா.வினோத்

பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக கர்நாடகாவில் 3 பேர் கைது செய்யப்பட்ட‌னர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள சீனிவாசப்பூரை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது.

சீனிவாசப்பூரை சேர்ந்த ஜாகீர் உசேன், சுஹேல் தேஹித் பாஷா, முன்சூர் ஹுல்லா ஆகிய 3 பேர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர். இதற்கு அதே ஊரை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜக பிரமுகர் ராமா, அந்த 3 பேர்குறித்து, சீனிவாசப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஜாகீர் உசேன், சுஹேல் தேஹித் பாஷா, முன்சூர் ஹுல்லா ஆகிய 3 பேரை கைது செய்தனர். நேற்றுமுன்தினம் இரவு சுஹேல் தேஹித் பாஷாவை போலீஸார் கைது செய்த நிலையில், நேற்று மேலும் 2 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்