டெல்லி: கடந்த 24 ஆண்டுகளில் 5000 கார்களை திருடிய பலே ஆசாமியை கைது செய்துள்ளனர் டெல்லி போலீசார். நாடு முழுவதும் தன் கைவரிசையை அவர் காட்டி வந்துள்ளதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர் கார்களை கொள்ளையடிக்கும் குழுவின் தலைவன் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
அவர் பெயர் அனில் சவுகான். வயது 52. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தால் அவர் மீது 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்த போது போலீசார் ஆறு துப்பாக்கிகள், திருடப்பட்ட பைக் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
யார் இவர்? அனில் சவுகான் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 1998 முதல் கார்களை அவர் திருடி வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 கார்களை அவர் திருடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடந்த காலங்களில் அவர் பல்வேறு முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார் என தெரிகிறது.
அசாம் அரசின் முதல் பிரிவு ஒப்பந்ததாரராக அவர் இயங்கி வந்துள்ளார். அமலாக்கத்துறை சோதனையில் அவரது சொத்துகள் பறிபோயுள்ளது. அதன் பின்னர் அவர் மீண்டும் திருட்டு வேலையில் இறங்கியதாக தெரிகிறது. அதோடு சட்டத்திற்கு புறம்பாக ஆயுத விநியோகம் மேற்கொண்டு வந்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவருக்கு மூன்று மனைவி மற்றும் ஏழு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago