சென்னை: உடல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக கடத்திச்சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
போதை தடுப்பு நடவடிக்கை
அதன் ஒரு பகுதியாக `போதை தடுப்புக்கான நடவடிக்கை' என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
» டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் ஜாமீன் ரத்தாகுமா? - ஐகோர்ட் நோட்டீஸ்
தனிப்படை போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வேளச்சேரி தனிப்படை போலீஸார் டிஎன்பிஎச் காலனி 2-வது மெயின் ரோட்டில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 5 பேர் இருசக்கர வாகனத்தில் உடல்வலி நிவாரண மாத்திரைகளைப் பதுக்கிவைத்து, ரகசியமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இவர்கள், உடல்வலி நிவாரண மாத்திரைகளை, போதைப் பொருளாகப் பயன்படுத்த கடத்தி வந்ததையும் தனிப்படை போலீஸார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, வேளச்சேரி ஜானகிராமன் (24), முனீஸ்வரன் (23), பாலுசாமி (24), கொடுங்கையூர் சுல்தான் அலாவுதீன் (32), வியாசர்பாடி நரேஷ் (32) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 5,000 உடல் வலி நிவாரண மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago