நாமக்கல் | பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் திண்டுக்கலைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் திருச்செங்கோடு நெய்காரன்பட்டியைச் சேர்ந்த திருமணமான பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஓ.சுரேஷ் (35), பி.சுப்பிரமணி (50). இருவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் இருவரும் சென்றபோது எதிரே திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சேர்ந்த சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆர்.ராமகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ், சுப்பிரமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் வந்த ராமகிருஷ்ணன் மனைவி ஜீவிதாவும் (21) சம்பவ இடத்திலேயே உயிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் 3 பேர் உடல்களையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஜீவிதாவிற்கு கடந்த சில தினங்களக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்