ஆட்டோவில் வீடு திரும்பிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28-ம் தேதி பணியின் காரணமாக திருப்பூர் சென்றவர் நள்ளிரவு கோவை திரும்பினார். ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தம் முதல் செல்வபுரம் வரை செல்ல செயலி மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணித்தார்.
உக்கடம் அருள் நகரை சேர்ந்த முகமது சாதிக் (43) என்பவர் ஆட்டோவை ஓட்டினார். அவிநாசி சாலையில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். ஆட்டோ ஓட்டுநர் தப்பி சென்றுவிட்டார்.
படுகாயமடைந்த அந்த பெண் தனது தோழிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தோழிகள் அவரை மீட்டு விமானநிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இளம்பெண் அளித்த புகாரின்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பீளமேடு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் முகமது சாதிக்(43) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பேருந்து ஓட்டுநர் கைது
கோவையை சேர்ந்த 14 வயதான பள்ளி மாணவி தனியார் பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். பேருந்தில் நடந்துநராக பணியாற்றிய தென்னமநல்லூர் பகுதியை சேர்ந்த சகாதேவன்(25), மாணவியுடன் பழகியுள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நடந்துநர் அவரது பாட்டி வீட்டுக்கு மாணவியை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவி அவரது உறவினரிடம் தெரிவித்ததையடுத்து,தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து சகாதேவனை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago