திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி அமுதா (30). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கூடாநட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 2 முறை வீட்டைவிட்டுச் சென்ற அமுதா, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஜோதீஸ்வரனுடன் மாயமானார்.
இச்சூழலில், இருவரும் திருவள்ளூர் பெரியகுப்பத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தது பாபுவுக்கு தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் அமுதா அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். உடன் இருந்த ஜோதீஸ்வரனும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த திருவள்ளூர் டவுன் போலீஸார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago