தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் காரில் கடத்திய விவகாரம்: தலைமறைவாக இருந்த பெண் மருத்துவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: தியாகராய நகரில் துப்பாக்கி முனையில் தொழில் அதிபர் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் மருத்துவர் ஒருவரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரவணன் (46). கடந்த 20-ம் தேதி வீடு புகுந்து, இவர் காரில் கடத்தப்பட்டார்.

இவரை கடத்திய வழக்கில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவையை சேர்ந்த சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் குரு (23), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஜய் (24), விஜயபாண்டி (25) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பொம்மை துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், சரவணன் தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திரும்ப செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால், மிரட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு தந்தது சரவணனிடம் பழக்கத்தில் இருந்த தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பதும், அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வருவதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் போலீஸார் தன்னை தேடுவதையறிந்து அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரையில் சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் 2 பேரும் நெருங்கி பழகினர். ஆரோக்கிய ராஜூம் இவர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே டாக்டர் அமிர்தாவுக்கும், சரவணனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏற்பட்டுபகை உருவாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆரோக்கியராஜூம் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சரவணனை கடத்தி பணத்தை பெற அவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அப்போது டாக்டர் அமிர்தா, ‘நான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் சரவணன் உடனே வந்து விடுவார்.

பின்னர் அவரை இங்குள்ள அறையில் அடைத்து பணத்தை வாங்கி விடலாம்’ என்று கூறியிருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று ஆரோக்கியராஜ், அவரது கூட்டாளிகள் சரவணன் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுக்கவே, கடத்தியது தெரிய வந்துள்ளது. தற்போது அமிர்தாவிடம் விசாரணை நடக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்