தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சா, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக சரக டிஐஜி கயல்விழிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பேராவூரணி அருகே பின்னவாசலில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார்(40), தேனியைச் சேர்ந்த படையப்பா(24), பின்னவாசலை சேர்ந்த சிதம்பரம்(50) என்பதும், 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும், இதற்காக ஆந்திராவில் இருந்து லாரி ஒன்றில் 460 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, அதை சுமை ஆட்டோவில் மாற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லாரி, சுமை ஆட்டோ, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
» ராயப்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது
» ‘விடுதலைப்போரில் வீரத் தமிழகம்’ - ஒலி-ஒளிக்காட்சி செப்.1 வரை நீட்டிப்பு
இதேபோல, தஞ்சாவூர் ரயில்வே குட்ஷெட் எடை மேடை அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு சிலர் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற தனிப்படை போலீஸாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், அங்கிருந்த 5 பேரை மடக்கிப் பிடித்து, லாரிகளில் சோதனை செய்தபோது, அதில், 128 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், திருபுவனம் அசாருதீன்(19), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஆசிப்ராஜா(25), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சதாம்உசேன்(30), புதுகொத்தைகாட்டைச் சேர்ந்த மாணிக்கராஜ் (37), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய்(41) ஆகியோர் என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, 2 லாரிகள், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், 5 பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago