‘உடலில் காயங்கள்’: நடிகை சோனாலி போகத் உடற்கூறு ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

ஹரியாணா மாநில நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக அவரது கூட்டாளிகள் இருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இது தெரியவந்துள்ளது.

மாரடைப்பு தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என சொல்லப்பட்டது. இருப்பினும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். அதையடுத்து உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

“உடலில் பல இடஙக்ளில் காயங்கள் உள்ளன. அதை வைத்து பார்க்கும் போது அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டும்” என மருத்துவர்கள் உடற்கூறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அவரது உணவில் விஷம் கலந்திருக்கலாம் என அவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சோனாலி போகத் உடலை பரிசோதித்த பெண் போலீஸ் அதிகாரிகள் அவரது உடலில் கூரான முனை கொண்ட ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது மரணம் தொடர்பாக அவர் கோவா வந்த போது உடனிருந்த உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நபர் சுக்விந்தர் வாசி மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது கணவர் கடந்த 2016 வாக்கில் உயிரிழந்தார்.

யார் இவர்?

நடிகை சோனாலி போகத் (42) தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையானவர். 2020-ம் ஆண்டில் நடைபெற்ற பிக் பாஸ் ஷோவிலும் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார்.

முன்னதாக 2008-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து, 2019-ல் ஹரியாணா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார். தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார்.

விரைவில் நடைபெறவுள்ள ஆதம்பூர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக சோனாலி போகத் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சோனாலி நண்பர்களுடன் கோவா சென்றிருந்தார். சோனாலிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்