கடத்தப்பட்ட நாமக்கல் நிதி நிறுவன அதிபர் சேலத்தில் சடலமாக மீட்பு: 3 பேர் கைது

By கி.பார்த்திபன்

நாமக்கல்: கடத்தப்பட்ட நாமக்கல் நிதி நிறுவன அதிபர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மூவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரையைச் சேர்ந்தவர் கெளதம் (35). இவர் பாதரை அருகே வெப்படையில் கடந்த 6 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு வழக்கம் போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வீட்டருகே சென்றபோது அங்கு காருடன் நின்றிருந்த மர்ம கும்பல் கெளதமை தாக்கி மிளகாய் பொடி தூவி உள்ளனர். பின், அவரை இரு சக்கர வாகனத்துடன் காரில் கடத்தி சென்றனர். கணவர் கடத்தப்பட்ட தகவல் அறிந்த கெளதம் மனைவி திவ்யா வெப்படை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த வெப்படை காவல் துறையினர் காரில் கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கெளதமை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கெளதம் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஏரிக்கரையில் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இச்சூழலில் வழக்கில் தொடர்புடையதாக கூறி தீபன், பிரகாஷ், குணசேகரன் ஆகிய மூவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை வெப்படை காவல் துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்