விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, அவரிடமிருந்து நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (44). திங்கள்கிழமை மாலை விருதுநகரில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு சென்றார். வழியில் பாலவநத்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த ஏற்கனவே அறிமுகமான நார்த்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை முத்துச்செல்வம் தனது காரில் அழைத்துச் சென்றார்.
அந்த கார் கோபாலபுரம் - பாலவநத்தம் இடையே சென்ற போது, இயற்கை உபாதையை தணிக்க முத்துச்செல்வம் காரை நிறுத்தினார். அப்போது, அவர்களின் பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர், முத்துச்செல்வத்தை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் முத்துச்செல்வத்துடன் வந்த பெண்ணை தங்களின் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அப்பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், விருதுநகர் எஸ்பி மனோகரன் மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை நகர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேரை கைது செய்த செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago