தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் தூத்துக்குடி அருகே நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை ஆறுமுகநேரி- காயல்பட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 கார்களை மறித்து சோதனை நடத்தியதில், அவற்றில் முறையான ஆவணங்களின்றி, அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதிலிருந்த மருந்து, மாத்திரைகள், மற்றும் புதிய செல்போன் ஆகியவற்றையும், இரு கார்களையும் பறிமுதல் செய்தபோலீஸார், கார்களில் வந்த ஆறுமுகநேரி ஜெயபாரத ராஜா (36), அவரது தம்பி ஜெயபாரத சாரதி (34) மற்றும் சங்கரலிங்கம் (40) ஆகியோரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இவர்கள் மூவரும் சென்னையில் இருந்துமருந்து, மாத்திரைகளை வாங்கி வந்து, காயல்பட்டினம் கடற்கரை வழியாக, படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இலங்கையில் இந்த மருந்து, மாத்திரைகளின் மதிப்பு ரூ.32 லட்சம்” என்றனர்.
» மேட்டுப்பாளையம் | மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது ஆசிட் வீச்சு - போலீஸார் விசாரணை
» 40+ வயதினர்தான் இலக்கு: ஆண்களைக் குறிவைக்கும் ஆன்லைன் பாலியல் மிரட்டல்களின் பின்னணி
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago