செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் தனிப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருள். இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் காரில் காத்திருந்தார்.
அப்போது, சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒழலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சனும் அவரது நண்பரும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை துரத்திச் சென்று மடக்கி வழிப்பறி செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதைபார்த்த காவலர் அருள், நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அந்த நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது, அவரை சுதர்சன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், காயமடைந்த காவலர், சுதாரித்து அவரை மடக்கி பிடித்தார்.
பின்னர் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் அவரிடம் விசராணை நடத்தினர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அருள் சிகிச்சை பெற்றார். தப்பியோடிய அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago