சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி மதிப்பிலான 1.218 கிலோ கொக்கைன் போதைப் பொருளை சுங்கத் துறையின் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கடந்த 7-ம் தேதி ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அன்று அடிஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த ப்ரான்சிஸ் ஜோரெல் டோரஸ் டோரஸ் என்ற பெண் பயணியை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அந்தச் சோதனையில், அவரது கைப்பையில் ரூ.11.75 கோடி மதிப்பிலான 1.218 கிலோ கொக்கைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு அந்தப் பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் கே.ஆர். உதய்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago