கரூர்: பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூரை சேர்ந்தவர் வடிவேல் (30). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நச்சலூர் மேலநந்தவனக்காட்டையை சேர்ந்த வேலு என்ற வேலுசாமி (38), நச்சலூர் விஆர்ஓ காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), நச்சலூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த சங்கர் (24) ஆகிய 3 பேர் வடிவேலுவிடம் இது குறித்து விசாரித்து, அவரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதில் வடிவேலு படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க வேண்டாம். நாங்களே அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் என வடிவேலு குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மேற்கண்ட 3 பேரும் அவரை விபத்தில் காயமடைந்து விட்டதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் வடிவேல் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் இன்று தீர்ப்பு அறிவித்தார். அதில்,“வடிவேலுவை ஆபாசமாக திட்டியதற்காக 3 பேருக்கும் 15 நாள் சிறைத் தண்டனை, ரூ.100 அபராதம் அதைக் கட்டத் தவறினால் 7 நாள் சிறை தண்டனை. கொலை செய்த குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் அதை கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு சிறை, அடித்து காயப்படுத்திவிட்டு அதனை விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
17 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago