ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபத்தில் தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்ய வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் ஒருவரை போக்ஸோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் புனித அருளானந்தர் தேவாலயம் உள்ளது. இங்கு சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்த ஜான்ராபர்ட் (46) என்பவர் பாதிரியாராக இருந்தார். இவர் தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்ய வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமிகளிடம், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் பாதிரியார் ஜான் ராபர்ட் மீதான புகார் உறுதி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குழந்தைகள் நல அலுவலர் ஆனந்த்ராஜ் அளித்த புகாரின்பேரில், மண்டபம் போலீஸார் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து ஜான் ராபர்ட்டை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago