திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் ரூ.54 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆசிரியை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் (57) என்பவர் வீரவநல்லூர் ஆர்.சி. நடுநிலை பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஆசிரியையாக சேரன்மகாதேவி காலங்கரை தெரு லீனா (57) என்பவர் பணிபுரிகிறார்.
லீனாவும், அவருடைய சகோதரி பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரம் சலோமி (60) என்பவரும் சேர்ந்து மொபைல் செயலி (App) மூலமாக, லீனாவுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களைப் பெற்றும், சேரன்மகாதேவியில் ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களுடைய கையொப்பம் போலவே போலியாக கையொப்பமிட்டும் ரூ.54லட்சம் கடனாக பெற்று பணமோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப.சரவணனிடம், பேச்சியப்பன் மனு அளித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு காவல்ஆய்வாளர் முத்து தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியை லீனாவும், சலோமியும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago