ஹைதராபாத்: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை பைக்கில் வந்த பழைய குற்றவாளிகள் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிய சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செகந்திராபாத் அருகே மாரேடுபல்லி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வினய் குமார் (30). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி வினய் குமார் விசாரித்தபோது, அவரை திடீரென கத்தியால் குத்திவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து வினய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போலீஸார், கத்தியால் குத்திய நபர்களை கண்டறிந்தனர். இவர்கள் இருவரும் லங்கர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பவன் மற்றும் பாலாஜி நகரை சேர்ந்த சஞ்சய் என அடையாளம் கண்டனர். இவர்கள் வீடுகளில் பூட்டை உடைத்து திருடும் பழைய குற்றவாளிகள் ஆவர். போலீஸார் தனிப்படை அமைத்து இவர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago