மயிலாடுதுறையில் வீடு புகுந்து பெண்ணை கடத்திய 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வீடு புகுந்து பெண்ணைக் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன்(32). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், மயிலாடுதுறையில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இதனிடையே, விக்னேஸ்வரனிடம் பழகுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளார். ஆனால், விக்னேஸ்வரன் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, விக்னேஸ்வரனைக் கண்டித்து அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

14 பேர் கும்பல்

அதன்பின், ஜூலை 12-ம் தேதி விக்னேஸ்வரன் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விக்னேஸ்வரனைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 14 பேர் வந்து, அப்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, அவரை கடத்திச் சென்றனர்.

சிசிடிவியில் பதிவு

தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார், அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வாகன எண்களைக் கொண்டு, அவர்களை தேடி வந்தனர்.

அப்போது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அப்பெண் கடத்திச் செல்லப்பட்ட காரை போலீஸார் மடக்கி, அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும், விக்னேஸ்வரன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(35), செல்வகுமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்ததோடு, காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் விசாரணை நடத்தி, நேற்று மேலும் 5 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்