கோவை | மத்திய அரசின் விருது பெற்று தருவதாக ரூ.14.85 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

கோவை: மதுரை மாவட்டம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் சலீம் ராஜா(61). வழக்கறிஞர். இவர், கோவை குனியமுத்தூர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில்,‘‘கோவைப்புதூரைச் சேர்ந்த இக்னேஷியஸ் பிரபு(40), யுனிசெப் இன்டர்நேஷனல் கவுன்சில் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார்.

நண்பர் மூலம் எனக்கு அறிமுகமான அவர், மத்திய அரசில் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் மருத்துவர்கள், தொழிலதிபர்களுக்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து ஜன் சேவா புரஸ்கார் விருது பெற்றுத் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறினார்.

இதை நம்பிய நான், எனக்கு தெரிந்த மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என 12 பேரிடம் இருந்து ரூ.14.85 லட்சம் தொகையை பெற்று, இக்னேசியஸ் பிரபுவிடம் கொடுத்தேன். ஆனால், அவர் கூறியபடி விருது பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இக்னேஷியஸ் பிரபுவின் மீது போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்