சென்னையில் ஒரே வாரத்தில் 12 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

சென்னையில் தொடர்ச்சியாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, பழைய வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்தோணி(23), மணிகண்டன்(23), ஐய்யப்பன்(26) ஆகியோரை கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்த வண்ணாரப்பேட்டை போலீ ஸார், அவர்கள் 3 பேரையும் கடந்த 26-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

நகை பறிப்பு

அதேபோல, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சதீஷ்(27), இவரது சகோதரர்கள் முரளி(25), தினேஷ்(22), இவர்களது தந்தைகிருஷ்ணா(49) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த முகேஷ்(23) ஆகியோர் சுரேஷ் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கிலும்,

நீலாங்கரையைச் சேர்ந்த சந்தோஷ்(22), ஹக்கீம்(29), சைதாப்பேட்டையைச் சேர்ந்தவிஜய குமார்(30), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்பாஷா(31) ஆகியோர் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கிலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீஸார் ஜூலை 27-ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

223 பேர் சிறையில் அடைப்பு

அந்த வகையில், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 29-ம் தேதி வரை 223 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றுகாவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE