தூத்துக்குடி: சொத்துக்காக முதியவர் கொலை

By செய்திப்பிரிவு

சாயர்புரம் ஏற்காடு தெருவைச் சேர்ந்தவர் தா.சிம்சோன் (75). இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் பிளசி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன் (41) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆட்டோ ஓட்டுநரான முருகன், தனது மாமனார் சிம்சோனிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிம்சோன் வீட்டுக்கு சென்ற முருகன் தகராறு செய்துள்ளார்.

அப்போது கட்டையால் தாக்கப்பட்ட சிம்சோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை முருகன் ஒரு போர்வையில் சுற்றி தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்துள்ளார்.

பொதுமக்கள் ஆட்டோவை விரட்டியபடி ஓடி வந்துள்ளனர். இதனால் முருகன் தனது ஆட்டோவையும், மாமனார் சடலத்தையும் அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். முருகனை புதுக்கோட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்