திண்டுக்கல் | கணவர் கொலை வழக்கில் மனைவி உட்பட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கோபாலன் (35). தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (30). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் வசித்து வந்தனர். கடந்த மே 4-ம் தேதி சின்னக்கரை லட்சுமிநகர் செல்லும் சாலையில் கோபாலனை மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

மனைவி சுசீலா அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மாரீஸ்வரன் என்பவரும் சுசீலாவும் பழகி வந்ததை கோபாலன் கண்டித்ததும், கூலிப்படையை ஏவி கோபாலனை மாரீஸ்வரன் கொலை செய்ததும், இதற்கு சுசீலா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக மாரீஸ்வரன் (26), மதன்குமார் (21), மணிகண்டன் (24), கிடா (எ) வினோத் (28), லோகேஸ்வரன் (20), விஜய் (25), சுசீலா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பரிந்துரைப்படி, 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கான நகலை, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடமும் போலீஸார் நேற்று வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்