பாம்பு கடித்து மாணவி இறந்த வழக்கில் திருப்பம்; சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அம்பத்தூரில் முதியவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: பாம்பு கடித்து இறந்த மாணவி வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த சிறுமியிடம் முதியவர் ஒருவர் 3 மாதத்துக்கு முன்பு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் அத்தையுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி அந்த சிறுமி பாம்பு கடித்து இறந்தார். பாம்பு கடித்து இறந்த மாணவியிடம், ஏற்கெனவே 3 மாதத்துக்கு முன்னர் முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியிடம் அத்துமீறிய 78 வயதுமுதியவர், அதை வீடியோ எடுத்தவர் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் என 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, சிறுமியை முதியவர் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ உள்ளது. இருப்பினும், சிறுமி இறப்புக்கு பாம்பு கடித்ததே காரணம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்