விருத்தாசலம் பிளஸ் 2 மாணவி தற்கொலை: போலீஸ் வழக்குப் பதிந்து விசாரணை

By செய்திப்பிரிவு

விருத்தாச்சலத்தில் பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது பெற்றோர் இறுதி சடங்கு செய்ய முற்பட்ட போது, காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆயியார் மடம் பகுதியில் வசித்து வந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்குச் சென்றிருந்த அவரது பெற்றோர் இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டில் உள்ள அறையில் துணியால் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதைக்கண்ட பெற்றோர் கதறி அழுதுள்ளனர். அக்கம் பக்கத்தினர் சென்று, மாணவியின் உடலை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக,பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்குக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் காவல் நிலையத்தினர் அங்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுபோன்ற நிகழ்வு நடந்தால் காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் இருப்பது குற்றம் என்பதையும் எடுத்துரைத்தனர்.

மாணவி, கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரியாக படிக்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறையினரால கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்